மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு தொழில் அமைப்புகளும் தங்களது கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று வருகின்றன. இதனிடையே, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தினர் (காட்மா) மத்திய அரசிடம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, காட்மா அமைப்பின் தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றால் தொழில்கள் முடக்கப்பட்டு, பொருளாதாரத்தை இழந்து நிற்கும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கான தற்போதைய வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே பெற்றுள்ள கடன்களுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்றும் கூற்னார். லேபர் சார்ஜ் அடிப்படையில் செய்யப்படும் ஜாப் ஒர்க்கிற்கான ஜி.எஸ்.டி வரியை 12% ல் இருந்து 5% குறைக்கப்பட்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.