கோவையில் தென்பட்ட வெள்ளை நாகம்

white-snake.jpeg

கோவை குறிச்சி சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதாக பார்க்கப்படும் வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழையில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தெரிவித்துள்ளனர்

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கும், பாம்பு பிடி தன்னார்வ அமைப்பிற்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் மழை நீரில் இருந்த 3.5 அடி நீளமுள்ள வெள்ளை நாகத்தை பத்திரமாக மீட்டனர்.

பிறகு கோவை சரக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வெள்ளை நாகம் மாங்கரை வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

scroll to top