கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கோவை காந்திபுரம் அண்ணா சிலை முன்பு முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அவைத்தலைவர் கணபதி ராஜ்குமார், மேயர் கல்பனா ஆனந்த், துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில்,பொருளாளர் எஸ். எம். பி. முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ. தமிழ்மறை,கலந்து கொண்டனர்.