கோவையில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கோவை காளப்பட்டி பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் என சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். இதில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இம் முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி,,கோவை பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், சேனாதிபதி, பையா கிருஷ்ணன் , சி.ஆர்.ராமச்சந்திரன், டாக்டர் வரதராஜன்,IT.wing துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன்,மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

scroll to top