கோவை மாவட்டம் ,காந்திபுரம், ராம்நகர் ராம் லட்சுமி மஹாலில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தினங்களில் கோவை நவ இந்தியா, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் ஏழாவது மாவட்ட மாநாடு நடைபெற உள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பின் வாயிலாக தமிழ்நாடு பிராமண சங்க கோவை மாவட்ட தலைவர் N S ரமேஷ் தெரிவித்தார். மேலும் மாநாட்டில் சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், நடிகர் டெல்லி கணேஷ், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு பிராமண சங்க கோவை மாவட்ட பொதுச்செயலாளர் G கணேசன், மாவட்ட பொருளாளர் G பாலாஜி மற்றும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.