கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 26 ஆக உயர்வு

கோவையில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் கடும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சூலூர், மதுக்கரை, துடியலூர், அன்னூர் போன்ற பகுதிகளில் தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், இப்பகுதிகள் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையில் நோய்த்தொற்றின் விகிதம் 1% இருந்து 3.1% உயர்ந்துள்ள நிலையில், மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

scroll to top