தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கோவை மாநகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஞாயிறு ஊரடங்கு கோவையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு நகரில் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை முக்கிய கடை வீதிகள் உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி, டவுன் ஹால், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.