கோவையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் திமுகவினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி, காளை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு கோவையில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் இந்த போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு திமுக இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்த முடிவு செய்தது.
அதன் பேரில், கோவையில் வரும் 9ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், திமுகவினரின் தலையீடு இருப்பதாக பல நாட்களாக குற்றச்சாட்டு இருந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் நுழைந்த திமுகவினர் தங்களது கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.
இதனால் தமிழகத்தில் பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்து வந்த விவசாயிகள் கடுமையாக வேதனை அடைந்துள்ளனர்.