கோவையில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில், 75வது சுதந்திர தின கொண்டாட்டமாக கோவை கொடிசியா வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் இந்திய சுதந்திர போராட்டம் குறித்த அரிய புகைப்படங்களும், சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

scroll to top