நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கோவையில் இந்த முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : கோவையில் 671 கல்வி நிறுவனங்களில் முகாம்கள் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 83 பள்ளிகளில் 16 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு இருந்த ஒருவர் குணமடைந்துள்ளார். அவர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கோவையில் டெங்கு பரவல் உள்ளது. டெங்கு பாதிப்படைந்த பகுதகளில் சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சியில் 900 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் விடுமுறை அளிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.