கோவையில் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்

கோவையில் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை வ.உ.சி சாலை நேரு விளையாட்டு அரங்கம் அருகில் கோ ஆப்டெக்ஸ் கடையில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார்.கோ ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையின் இலக்காக தமிழ்நாடு முழுவதும் 200 கோடி நிர்ணயம்  செய்துள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக கோவையில் 25 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்ச்சியில் கோ ஆப்டெக்ஸின் தலைவர் A.V.வெங்கடாஜலம் மண்டல மேலாளர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

scroll to top