கோவையில் கொங்கு வேளாளர் சமூக நலச் சங்கம் மற்றும் கொங்கு வேளாளர் திருமண சேவை மையத்தின் புதிய அலுவலகம் திறப்பு

WhatsApp-Image-2023-03-27-at-5.22.55-PM.jpeg

கோவை 100 அடி ரோடு 7ஆவது வீதி சந்திப்பு அருகில் கொங்கு வேளாளர் சமூக நலச் சங்கம் மற்றும் கொங்கு வேளாளர் திருமண சேவை மையத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.

தலைவர் நடராச கவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் சின்னத்தம்பி கவுண்டர் ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ராம்குமார், நாச்சிமுத்து, திருமண சேவை மையத்தின் செயலாளர் சிங்கை ரவிசந்திரன், பொருளாளர் சின்னு ராமசாமி மற்றும் சண்முகசுந்தரம், விஜயா, தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கொங்கு வேளாளர் சமூக நலச் சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஏ.டி.ராஜன் நன்றி கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தலைவர் நடராச கவுண்டர், கொங்கு வேளாளர் சமூக நலச்சங்கம் மற்றும் கொங்கு வேளாளர் திருமண சேவை மையம் இரண்டும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருகின்ற ஆண்டுகளில் எங்களது சமுதாய மக்கள் மட்டுமின்றி பிற சமுதாயத்திலும் உள்ள படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்குவோம் என்று கூறினார்.

scroll to top