கோவையில் கார் மோதி சிறுவன் பலி

cctv.png

கோவையில் கார் மோதி சிருவன் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போத்தனூர் வண்ணாரப்பேட்டை வீதியை சேர்ந்த பாஷித் என்பவரது மகன் ரைபுதீன்(8). மூன்றாம் வகுப்பு படித்து வந்த இந்த சிறுவன் தனது சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தான்.

அப்போது வீட்டின் அருகே புதிதாக கார் வாங்கிய செய்யது முகமது பெரோஸ் (34) என்பவர் தனது காரை வீட்டின் வளாகத்திற்குள் நிறுத்துவதற்காக காரை பின்பக்கமாக எடுக்க முயன்றார். அப்போது தவறுதலாக அவர் காரின் முன்பக்க கியரை போட்டதால் சிறுவன் ஓட்டி வந்த சைக்கிள் மீது எதிர்பாராதமாக மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான்.

அவனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top