கோவையில் கார் குண்டு வெடிப்பு: 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

Pi7_Image_WhatsAppImage2022-10-23at10.29.29-e1666505810357.jpeg

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் குண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில, அந்த காரில் வந்த ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து நடைபெற்ற விசாரணையில் முபின் வீட்டில் 76 கிலோ வேதி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 109 வேதிப்பொருட்கள் இருந்ததாக தகவல் வெளியாகின. இந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக, நெல்லை மேலப்பாளையத்தில் மதகுருவாக பணியாற்றி வந்தவர் உள்பட, சாஹிப் முகமது அலி (வயது 35), சையது முகமது புகாரி(வயது 36), முகமது அலி (வயது 38), முகமது இப்ராஹிம் (வயது 37) ஆகிய நான்கு பேர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இவர்களிடம் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணை நடத்திய நிலையில், வெளியாகியுள்ளன.

scroll to top