கோவையில் இரு தினங்களுக்கு முன்பு கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபீன் என்ற நபர் பலியானார். தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் நடந்த இந்த சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. விசாரணை அடிப்படையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே, மாருதி காரில் கேஸ் சிலிண்டர் வெடி விபத்து வழக்கில் ஐந்து நபர்கள் கைது செய்யப்படனர். முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23) இந்த இருவரும் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதுபோல் முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) இந்த மூன்று பேரும் உக்கடம் G.M.நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதனிடையே, உக்கடம், டவுன் ஹால், ரயில் நிலையங்களில் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் மாநகர காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். சிஆர்பிஎஃப் வீரர்களும் உடன் இருக்கின்ற்னர்
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவம் ; 5 பேர் கைது
