கோவையில் கனமழை: நாளையும் மழை நீடிக்க வாய்ப்பு

கோவையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கடந்த மாதத்தில் இருந்து நீடித்து வருகிறது. கடந்த சில கோவையில் மழை பெய்யாத நிலையில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.அதன்படி, உப்பிலிபாளையம், அவிநாசி ரோடு, அண்ணா சிலை, பாப்பநாயக்கன் பாளையம் கணபதி, சரவணம்பட்டி, டெக்ஸ்டூல் பாலம், சித்தாபுதூர், காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.கோவையில் இரண்டு வாரத்திற்கு முன்பு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.மழை நாளையும் நீடிக்கலாம் என்று வானிலை ஆர்வலர் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்தார்

scroll to top