கோவையில் எம்ஜிஆரின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன்.கே.அர்ச்சுணன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

பின்பு அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ச்சுணன் மலர் தூவி மரியாதை செய்தார்.

scroll to top