கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடு மீறல்: ஒரே நாளில் ரூ.5.53 லட்சம் அபராதம் வசூல்

2021062929-300x300-1.jpg

கோவையில் நேற்று ஞாயிறு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில். வெவ்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காண்ப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.5 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ‘நேற்று முழு உரடங்கின் போது கட்டுப்பாடுகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்ப்டது. அபராத தொகை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது’.

scroll to top