கோவையில் வெயிலில் குழந்தையை வைத்து கொண்டு ஒரு இளம் பெண் தவிப்பதை பார்த்து அவருக்கு உதவிக்கரம் நீட்ட வந்த போக்குவரத்து காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும் தாயுடன் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். வெயிலின் தாக்கத்தால் அப்பெண் அங்கிருந்த போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை நிழலில் வந்து நிட்ன்ரதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் கிஷோர்குமார் அந்த இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தையை வாங்கி கொண்டு, அவரை அங்கிருந்த இருக்கையில் அமரக்கூறி தண்ணீர் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த இளம்பெண் சுமார் 20 நிமிடங்கள் அவரது தாய் வைத்திருந்த உணவை சாப்பிடும் வரையிலும் குழந்தையை காவலர் கிஷோர்குமார் தூக்கி வைத்திருந்தார். கடும் பணிகளுக்கு இடையே போக்குவரத்து காவலரின் இந்த மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.