கோவை வஉசி பூங்கா அருகே காந்திபுரம் நஞ் சப்பா சாலையில் 123 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மத்திய சிறைடந்த 1872 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு பல்வேறு முக்கிய கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள்,விசாரணை கைதிகள் ,தண்டனை கைதிகள் என சுமார் 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கு சிறை அதிகாரிகளின் குடியிருப்பு மற்றும் பயன்பாடற்ற கட்டிடங்கள், காலியிடங்கள் உள்ளன. 2010-ம் ஆண்டு, கோவையில் நடைபெற்ற தமிழ் செம்மொழி மாநாட் டின் போது, ‘‘நகரின் மையப்பகுதியில் உள்ள மத்திய சிறை நகருக்கு வெளியே இடமாற்றம் செய்யப்படும், சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்’’ என முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது மாநகராட்சி வ உ சி உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியை சிறை வளாகத்தில் அமைக்கவும் அதிமுக அரசு பரிசீலனை செய்தது.
இந்நிலையில், கோவை யில் சமீபத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் கோவை மத்திய சிறை ச்சாலையில் இடம் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தார். இங்கு செம்மொழி பூங்கா ரூ 200 கோடியில் 2 கட்டமாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்
இதைத் தொடர்ந்து, சிறையை இடமாற்றம் செய்யவும், அங்கு சர்வதேச தரத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கவும் தேவையான நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
முதல்கட்டமாக, சிறை வளா கத்தில் குறைந்தபட்சம் 150 ஏக்கர் பரப்பளவில் ஒரே இடமாக ஒதுக்குமாறு சிறை நிர்வாகத்தினர், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளலூரில் ஆர்.பி.எப் வளாகம் அருகே, சிறைச்சாலை அமைக்க இடம் போதுமானதாக இருக்கும் என மாவட்ட நிர்வாகத்தினர் கருது கின்றனர்.
அது சரி யாக அமைந்தவுடன் சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக சிறைத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.