கோவையில் அம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஊழியர்கள்

delivery.webp

கோவை அன்னூர் பகுதியை சேர்ந்தவர் கோகுல் பிராசாந்த் இவரின் மனைவி வினோதினி (20). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் இருக்கும்பொழுது மிகுந்த வலியுடன் துடித்து வந்தார் இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சிறுமுகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வீட்டில் சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே வந்தது இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் தினேஷ் பைலட் நந்த கோபால் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய் சேய் இருவரையும் சேர்த்தனர் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர் அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர் களுக்கு மக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

scroll to top