கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது! உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதும், கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுத்த நகைகளை உருக்கி, தங்கக்கட்டிகளாக மாற்றி, டெபாசிட் செய்து, அதில் வரும் வருமானத்தைக்கொண்டு கோவில்கள் நிர்வகிக்கப்படும் என அறிவித்தது. மேலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து கோவில் நகைகளை கணக்கெடுப்பு பணி தொடரலாம் என்றும், தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக 6 வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

scroll to top