வே.ரோகிணி
‘‘பட்டத்து இளவரசர் கலா வல்லவராயன் பராக்… பராக்..!’’ கட்டியங்காரன் ஓங்காரக்குரலெடுத்து கட்டியங்கூறினான். முரசங்கள் அதிர்ந்தன. இருவர் கொம்பூதி முழக்க, பேரிகைகள் முழங்கின.
கோவிந்தராயன் முகத்தில் சவக்களையிலும் ஒரு முறுவல் தெரிந்தது. அகண்ட புஜங்கள். மார்பைத் தவழும் மணிமாலைகள். அதையும் மீறி பெருகி நிற்கும் நெஞ்சில் சுருண்டு எகிறும் எதிர்ரோமங்கள். அலை, அலையாய் முடிக்கற்றை முதுகு வரை படர்ந்தது. மஞ்சளும், சந்தனமும் கலந்த நிறம். இடுப்பில் சுருட்டின வாக்கில் பட்டு வேட்டி. ராஜகம்பீர நடையுடன் வந்தான் கலாவல்லவராயன். அவனை எதிர்கொண்டு நெற்றி பற்றி உச்சிமோந்தாள் தாய் மகிழினி. பட்டத்தரசியின் காலைத் தொட்டு வணங்கினவன், நேரே தந்தை கிருஷ்ணராயனை பார்வையால் எதிர்கொண்டான். மகராஜாவானவர் இளையராஜாவின் கண் பட்ட மாத்திரத்தில் தன் முகத்தை வேறெங்கோ திருப்பிக் கொண்டார்.
இந்தப் பல்லக்கும், அரியாசனமும் எனக்கு முள் படுக்கையாகி வெகுநாட்களாகி விட்டது. உன் வயதில் நான் என் தந்தைக்கு ஓய்வு கொடுத்து பட்டம் சூட்டிக் கொண்டேன். அதே வேகத்தில் வடக்கே புறப்பட்டு வந்த கங்கர்களை வென்றேன். தெற்கே திரண்டு வந்த சேரப்படையைத் தெறித்தோட வைத்தேன். நம் வீரத்தைப் பார்த்து சோழ மன்னனே செலுத்தும் திரையில் ஒரு பங்கைக் குறைத்தான். அப்படியான இளமைத்துடிப்பு இப்போது உன்னிடம் இருக்கிறது. மகனே நீ கலை சாம்ராஜ்யத்தில் சகலகலா வல்லவன்தான். ஆனால் என் தோள் வலிக்கிறது. சுமையை இறக்கி வைக்கத் துடிக்கிறேன். ஏற்றுக் கொள்!’’ என்று எத்தனை தரம்தான் சொல்லியிருப்பான்.
ம்கூம் இவன் பேச்சை மைந்தன் மதிப்பானாக இல்லை.
‘‘தந்தையே உங்களுக்கு என்ன வயதாகி விட்டது. சமீபத்தில்தானே எட்டாவது சிற்றன்னையை மணந்து கொண்டு அந்தப்புரத்து பதுமையாக்கினார்கள். அதற்கெல்லாம் வலியாத தோள் ராஜ்யம் ஆள்வதில் மட்டும் சுமையாகக் கனப்பதேனோ?’’ என்று எதேச்சையாகத்தான் கேட்டான். அவன் சொல்லி ராஜா தலைகுனிந்தானென்றாலும், பட்டத்து ராணியான மகிழினி கோபம் காட்டினாள்.
‘‘மைந்தனே என்ன பேச்சு பேசுகிறாய். தந்தையிடம் பேசுகிற பேச்சா இது. அவர் ஆயிரம் சேடியரை தன் அந்தப்புர நாயகிகள் ஆக்கலாம். அந்த எண்ணிக்கைதானே ராஜாதி ராஜாவுக்கு கம்பீரத்தைக் கொடுக்கிறது. இனியொரு முறை உன் சிற்றன்னைகளைப் பற்றி பேசினால் நீ தாயின் சத்தியம் மீறியவனவாய்!’’ என்றுரைத்தாள். இதோ அப்போதிருந்து இப்போது வரை கலாவல்லவராயன் அதுபற்றி வாய் திறந்ததில்லை. இதோ அப்பாவின் அப்பா அய்யன் படுகிடையாய் இருக்கிறார். எந்த நேரமும் அவர் சுவாசம் நின்று விடலாம். அவர் மூச்சுக் காற்று அடங்குவதற்குள் பட்டத்து இளவரசனுக்கு ராஜ முடி சூட்ட வேண்டும். இது ரட்டர்ராஜ்யத்தின் ஸ்கந்தபுரத்து ஐதீகமாகவே இருந்து வந்தது.
காடாறு மாசம்; வீடாறு மாசம் என்பது விக்கிரமாதித்த மகராஜாவுக்குத்தான் வாய்ப்பாடு. ஆனால் இந்த கலாவல்லவராயனுக்கு வீடு ஒரு மாசம், காடு பதினோறு மாசம் என்று சொன்னால் மிகையாகாது. காடும் மலையும் அவன் வாசஸ்தலமாகவே இருந்தது. இப்போது அய்யன் பெரிய மகராஜாவின் அழைப்புக்கு இணங்கி ஓடோடி வந்திருக்கிறான்.
‘‘அய்யா. ராஜா. என் இளவரசா வந்துட்டியா?’’ ரொம்பவும் திக்கித் திணறி பேசினார் பெரிய ராஜா.
‘‘வந்துட்டேன் அய்யா..!’’ மகாராஜா படுத்திருந்த கோலத்தைப் பார்த்ததும் இளையராஜாவின கண்களிலும் கண்ணீர்.
‘‘நீ மறுக்காமல் இந்த முறை தாத்தா பேச்சைக் கேட்க வேண்டும்!’’ பெரியராஜா கண்டிப்பான பார்வை பார்த்தார். இளையராஜாவுக்கு பொருள் புரிந்து விட்டது. இனி தப்பிக்க முடியாது. இவர்களிடம் தன் நோக்கத்தை எப்படிப் புரிய வைப்பது என்று ஏற்கனவே தீர்மானித்தபடிதான் வந்திருந்தான்.
‘‘தளபதி’’ என்று அழைத்தான். இளைராஜாவிற்கு பின்னே நின்றிருந்த ஏழெட்டு தளபதிகளில் இளையவரான ஒருவன் முன்னே வந்தான். அவன் கையில் பெரிய ஒரு ஓலைச்சுருள் இருந்தது.
இளையராஜாவின் சைகையிலிருந்தே அவர் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டவன் போல் அந்த ஓலையை அவனிடம் நீட்டினான்.
அதை வாங்கி அப்படியே விரித்தான் இளைராஜா. அங்கே நின்றிருந்த மந்திரி பிரதானிகள், ராஜாமாதா, கிருஷ்ணராயன், மகிழினி ஆகிய அனைவரின் பார்வையும் அந்த ஓலைச்சுவடியின் மீதே இருந்தது. அந்த ஓலையை நீள வாக்கில் இருவர் பிடித்துக் கொள்ள இளையராஜாவின் உயரத்திற்கு அது நீண்டிருந்தது. அதனுள்ளே, பச்சை வண்ணப் புள்ளிகளாய் ஒரு கோலம். இல்லையில்லை. ஓவியம். அதை ஒருமித்துப்ப பார்த்தவர்கள் அப்படியே அசந்து போயினர்.
தத்ரூபமாய் பெரிய மகராஜா கோவிந்தராயனின் முழு உருவம். அதே கம்பீரம். வாளுயர்த்தி நிற்கும் கோலம். அரண்மனையில் நீதி வழங்கும் காட்சி. அந்தப்புர ராணிகளுடன் அனந்த சயனம் கொள்ளும் காட்சி. பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்து போனவர் பட்டத்து ராஜா கிருஷ்ணராயன்தான்.
‘‘நான் இந்தப் பணியில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன் மகராஜா. இந்த ஓவியங்கள் வெறுமனே சுவடிகளில் இருப்பதில் அர்த்தமில்லை. இவை எல்லாவற்றையும் பாறைகளில் தீட்ட இருக்கிறேன். அதற்காக காடுமலையெல்லாம் திரிந்து விசேஷ மூலிகைகளைப் பறித்து சாயம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அதை வைத்து பாறை, குகைகளில் இந்த ஓவியங்களை வரைந்து விட்டால் அதை யாராலும் அழிக்க முடியாது. இந்த ஓலைச்சுவடிகள் போல பாச்சைகள் வந்து தின்று விடாது. இதைச் செய்வதற்கு இன்னமும் மாமங்கம் பிடிக்கலாம். அப்படி செய்து விட்டால் இந்த ஓவியங்களை யாராலும் அழிக்க முடியாது. நம் வரலாறு இப்படிப் பதிவாவதும் அவசியமானதுதானே மகராஜா. இந்த நேரத்தில் எனக்கு எதற்கு இந்த கிரீடம். பதவி. அது வரை அப்பாவே இருக்கட்டுமே!’’
பெரிய ராஜா கண்மூடி யோசித்தார். மூடின இமைகளிலிருந்து பெருக்கெடுக்கிறது நீர். இளையராஜா செய்வதும் நல்ல காரியம்தான். வரலாறு முக்கியம் அல்லவா? நம் வரலாறு இப்படி சிற்பங்கள், கல்வெட்டுகள், மலைக்குகை ஓவியங்கள் மூலம் காலந்தோறும் சொல்லிக் கொண்டிருந்தால்தான் நாம் நம்மை ஸ்திரப்படுத்திக்க முடியும். ஆனால் நம் மரபு அப்படியல்லவே!’
என்று யோசிக்கும்போதே நெஞ்சு கரட்டு, கரட்டென்று இழுத்தது.
‘‘இல்லப்பா. நீ கிரிடம் சூடு. அதனால் உனக்கு இந்தப்பணிக்கு யாதொரு தொந்தரவும் வராது!’’ திக்கித்திணறித்தான் பேசினான். அது சில கணநேரம் கூட நீடிக்கவில்லை. பெரிய மகராஜாவின் தொண்டயிலிருந்து கர்ட், கரட் சத்தம் இன்னமும் கூதுலாக. எல்லோரும் கரைந்தார்கள். ராஜா அழுது தேம்பினார். சுற்றி நின்ற வீரர்கள், வெற்றி வேல், வீரவேல் முழக்கமிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தார்கள்.. அது தர்மசங்கடமாகி விட்டது சின்ன ராஜாவுக்கு. ஓடற பாம்பை மிதிக்கிற வயசு. ஆனது ஆகட்டுமே என்று முடிவு எடுத்து விட்டான். அடுத்தது பட்டாபிஷேகம்தான். கண்டிப்பாக பட்டாபிஷேகம் செய்யப்படும் ராஜா மணமுடித்து தன் பட்டத்தரசியுடன்தான் சிம்மாசனம் ஏற வேண்டும் என்பது ரட்டர்கள் குல வழக்கம். அதையே செய்தார்கள். பறையடித்து நாற்பது சீமைக்கும் தெரிவித்தார்கள்.
‘‘இதனால் சகலருக்கும் அறிவிப்பதென்றால் ரட்டர்நாட்டு இளவரசர்.. கல்வி கேள்விகளில் தேர்ந்தவர். சிற்ப, கலை சாஸ்திரங்களில் அசுர சக்தி. கலாகலாவல்லவராயனுக்கு முடிசூட்டு விழா அரண்மனையில் நடைபெற உள்ளது. அனைவரும் அரண்னைக்கு வரலாம். இளையராஜாவானவரை கைப்பிடிக்க சுயம் வரம் நடத்தலாம்!’’எ
எண்ணி சில நாட்களில் மிக எளிமையாக சுயம்வரம். அந்த நாளில் அரண்மனையில் பதினெட்டு சிற்றரசர்களும் கூடியிருந்ததோடு, தன் மகளை, தன் தமக்கையை இளையராஜாவுக்கு அளிக்கத் தியராகி வந்திருந்தனர். வரிசையாய். மலர், ஆபரணத்தட்டுகளுடன் தங்கப்பதுமைகள் போல் இளம் பெண்கள். எல்லோருமே ஒவ்வொரு நாட்டு இளவரசிகள். அங்கே அத்தரும், ஜவ்வாதும், சந்தனமும் மணந்தது. அதனூடே எழும் புகைமண்டலத்தில் நடந்து வந்தான் இளையராஜா கலாவல்லவராயன்,.
கதைப்போம்.
THE KOVAI HERALD S.KAMALA KANNAN Ph. 9244319559