கோடையை வாட்டப்போகும் குடிநீர் பிரச்சனை:கண்டுகொள்ளாத கோவை மாநகராட்சி புது கவுன்சிலர்கள்

water-01-e1648387296172.jpg

THE KOVAI HERALD

கோவை மாநகராட்சிக்கு மண்டலத்தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் தேர்தல் வரும் 30, 31ந்தேதி நடைபெறுகிறது. அதில் யார் யார் பதவி பெறுவது என்று ஒரு பக்கம் அரசியல் காய்கள் நகர்த்தும் வேலைகளை கவுன்சிலர்கள் செய்து கொண்டிருக்க, மக்களோ வாட்டும் கோடைக்கு தண்ணீருக்காக பாடாய்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.
கோவைக்கு சிறுவாணி, பில்லூர் முதலாம், இரண்டாம், மூன்றாம் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. கோவையின் பழைய நகராட்சிப் பகுதிகளில் தினசரி தலா 12 மணி நேரம் குடி தண்ணீர் குழாயில் கொட்டிக் கொண்டிருந்தது. 72 வார்டுகளாக மாநகராட்சி உருவானபோது பழைய நகராட்சியுடன் இணைக்கப்பட்ட மாநக ராட்சிப் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு மணிநேரம் தலா 2 மணி நேரம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
குறிப்பாக சிறுவாணி நீர் என்பது கோவையின் பழைய நகராட்சிப்பகுதிகளுக்கும், பில்லூர் பவானி நீர் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. இது கடந்த 2011-க்குப் பிறகு சுத்தமாக மாறியது. பழைய நகராட்சிப் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும், இணைக்கப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளுக்கு வாரம் ஒரு முறையும் 12 மணிநேரம் குடிதண்ணீர் விடப்பட்டது. அதுவே கோவை மாநகராட்சி 100 வார்டுகளாக மாற்றப்பட்டு மேலும் சில பகுதிகள் இணைக்கப்பட்ட பின்பு நகரப்பகுதிகளில் வாரம் ஒரு முறையும், புதிய நகரப்பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறையும் மாற்றப்பட்டது.
போதாக்குறைக்கு 2- 3 மணி நேரம்தான் தண்ணீர் என்ற நிலையானது. கடந்த ஆட்சியிலோ, 24X 24 குடிநீர் விநியாகம் 100 வார்டுகளுக்கும் சாத்தியம் என்று சொல்லி, இந்த திட்டத்தை சூயஸ் என்ற கம்பெனிக்கு கொடுத்து விட்டது. இப்படி தனியாருக்கு குடிநீர் விநியோகத்தை ஒப்பந்தம் கொடுப்பதை அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக கடுமையாக எதிர்த்தது. நிறைய போராட்டங்கள் நடத்தியது. ஆனாலும் திட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருந்த அதிமுக அரசாங்கம் பழைய குழாய்களை எல்லாம் தோண்டிப்போட்டு புதுக்குழாய்கள் பதிப்பிப்பதிலும், புதிய மேல்நிலைத் தொட்டிகள் கட்டுவதிலம் வேகமாக ஈடுபட்டு வந்தன.
இப்போது ஆட்சி மாறி விட்டது. காட்சியும் மாறி விட்டது. அதிமுக ஆட்சியில் இருந்த வேகம் திமுகவினரிடம் இல்லை. தோண்டிப் போட்ட குழிகள் தோண்டிப்போட்டதுதான். சிதைந்த ரோடுகள் சிதைந்ததுதான். இந்த நிலையில் தற்போது தண்ணீர் கோவையின் இதயப்பகுதியான நகரப்பகுதியில் எல் லாம் இப்போதே தண்ணீருக்காக மக்கள் குடத்தை தூக்கிக் கொண்டு அலைவதைக்காண முடிகிறது. பொதுவாகவே கோடை காலங்களில் சிறுவாணி நீர் அணையின் அடியாழத்திற்குப் போய் விடும். பில்லூர் தண்ணீர் அங்கங்கே பைப்புகள் உடைந்து விடும். இதனால் தண்ணீர் விநியோகம் சீராகவே இருக்காது.
இருந்தாலும் அதை செய்து மக்களை கூல் படுத்த பழைய கவுன்சிலர்கள் அதிகாரிகளிடம் முட்டி மோதி தனக்குத் தோதான பகுதிகளில் தண்ணீர் கிடைக்க வழி செய்து விடுவார்கள். ஆனால் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பெரும் பாலும் அவைக்கு புத்தம் புதியவர்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும். மக்கள் நம் வீட்டைத்தான் முற்றுகையிடுவார்கள் என்பதெல்லாம். உணரவில்லை. ஒவ்வொரு பகுதிகளிலும் பகுதிச் செயலாளர்களுக்கும், வார்டு செயலாளர்க ளுக்கும், இவர்களுக்கும் ஒரு விதமான மறைமுக யுத்தமே நடந்து வருகிறது.
அதாவது ஒவ்வொரு வார்டிலும் 10 முதல் 30 வரை உப்பு நீர் பைப்புகள் போடப்பட்டுள்ளன. இதற்கு போர்வெல் போட்டு மின்மோட்டர் பொருத்தப்பட்டுள்ளன. அந்த மின் மோட்டர் பராமரிப்பு வேலையை அந்தந்த வார்டு கவுன்சிலர்கள்தான் எடுத்துக் கொள்வார்கள். இதற்காக ஒரு ஆழ்குழாய் கிணற்றுக்கு வருடத்திற்கு ரூ 1 லட்சம் வரை மாநகராட்சி டெண்டர் கொடுக்கிறது. அந்த வார்டு கவுன்சிலரே முன்பு கட்சியின் கிளைச் செயலாளராக இருந்ததால் பிரச்சனையில்லாமல் இருந்தது. இப்போது வார்டுக்கு பெரும்பாலும் கிளைச்செயலாளர்கள் கவுன்சிலர்கள் ஆக வில்லை.
எனவே இந்த ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு வேலை யாருக்கு என்பதில் கவுன்சிலர்களுக்கும், வார்டு கிளைச்செயலாளருக்கும் டக் அப் வார் நடந்து கொண்டிருக்கிறதாம். ‘நான்தான் கவுன்சிலர் நான் சொல்லும் ஆளுக்குத்தான் உப்புத்தண்ணீர் காண்ட்ராக்ட் என்று வம்பு செய்கின்றராம் பலரும். இந்த பஞ்சாயத்து வார்டுக்கு வார்டு ஓடியதில், ‘உங்களுக்குள் நீங்களே பேசி முடித்துக் கொள்ளுங்கள்!’ என்று மாவட்டத் தலைமை சொல்லி விட்டதாம். ஆகவே ‘10 கடை இருந்தா எனக்கு 6 கடை, உனக்கு 4 கடை!’ன்னு பிரிச்சுக்கறாங்களாம்.
இதுவே வார்டுக்கு 2 கவுன்சிலர்கள் இருந்தால் 4 கடையை ரெண்டாக பிரிச்சுக்கறாங்களாம். இதேபோல் அந்தந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மாமூல், தள்ளுவண்டிக் கடை, பெட்டிக்கடை வசூல் எல்லாம் யார் பார்த்துக் கொள்வது என்பதில்தான் தற்போது பேச்சு மும்மரமாக நடந்து கொண்டிருகிறது என்கிறார்கள்.
இதில் அமைச்சர் இன்னொரு பக்கம். கரூரைச் சேர்ந்த தன் ஆதரவாளர்கள் 100 பேரை இங்கேயே இருத்தி தினம் தினம் கூட்டம் நடத்தி வருகிறார்களாம். ஒவ்வொரு வார்டிலும் என்னென்ன கடைகள், என்னென்ன தொழில்கள், மக்கள் நிலை எப்படியிருக்கிறது. அதன் மூலம் நாம் எவ்வளவு வருவய் ஈட்ட முடியும்? என்று கணக்கு போடுகிறதாம் இந்த டீம். ஆக, கோடையில் கோவையை வாட்டப்போகும் தண்ணீர் பிரச்சனையை சிறிதளவு கூட இவர்கள் கண்டு கொள்வதாகக் காணோம்.
இது குறித்து நம்மிடம் பேசிய திமுக உடன்பிறப்பு ஒருவர், ‘‘இப்போது தேர்வு பெற்றுள்ள 90 சதவீதம் எங்கள் கவுன்சிலர்கள் அரசியலுக்கே புதுசு. அவர்களுக்கு வார்டுக்குள் என்னென்ன வேலைகளை செய்யணும். குப்பைகளா, குடிநீரா போன்ற பிரச் சனைகளைப் பற்றியே தெரியவில்லை. மேயர் கூட நேற்று முன்தினம் தன் சொந்த வார்டில் குப்பைகள் அகற்ற வேண்டும், புதர்களை அகற்ற வேண்டும் என்று ஊழியர்களை தன் வீட்டைச்சுற்றி பணி செய்ய ஏவியிருக்கிறார். குடிநீரைப் பற்றி இதுவரை எதுவுமே பேசவில்லை. அது அவருக்கான வார்டு கவுன்சிலர் பணி. அதையும் தாண்டி கோவை மாநகரத்திற்கே மேயர் என்கிற வேகம் அவரிடம் வரவேண்டும். இதே நிலையில்தான் கவுன் சிலர்களும் உள்ளனர்./ ஈஐ மாற வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

……………………….KAMALA KANNAN Ph.no.92443 17182

scroll to top