கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக சசிகலா விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை சம்மன்

sasikala12-.jpg

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவருமான சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நடத்திய சோதனையில், கோடநாடு எஸ்டேட்டில் காணாமல போனதாக கூறப்படும் சில நிலப்பத்திரங்கள், சசிகலாவுக்கு சொந்தமான இடங்களிலும், சென்னையில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இருந்தும் கைப்பற்றப்பட்டது. இதை மேற்கோள் காட்டி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவுக்கு நீலகிரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

scroll to top