கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு தீர்ப்பு அறிவிப்பு: குற்றவாளி யுவராஜ்க்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை.

gokulraj-case-e1646736583452.jpg

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி கடந்த 5ந்தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.  முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபணம் ஆகியுள்ளதாகவும், இந்த வழக்கில் தொடர்புடைய  அருண், குமார், சங்கர், அருள் வசந்தம், செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகியோரும் குற்றவாளிகள் என்றும், செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ் ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி மார்ச் 5ந்தேதி  நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதைத்தொடர்ந்து 8ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிபதி கூறினார். அதன்படி முதலாவது குற்றவாளி யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. இரண்டாவது குற்றவாளியும் யுவராஜின் கார் ஓட்டுனருமான அருணுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு.
யுவராஜுன் ஓட்டுநர் அருணுக்கு 3 ஆயுள் தண்டனை குமார், சதீஷ், ரகு, ரஞ்சித் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை பிரபு, கிரிதருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு

scroll to top