கொரோனா பரவல் காரணமாக மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை

இன்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதார அமைச்சர்களுடன் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 27,553 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தல், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பரிசோதனைகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், மாநிலங்கள் கொரோனா கால நிதியை முறையாகப் பயன்படுத்தவும், மாநிலங்கள் தங்களுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை தெரியப்படுத்திப் பெற்றுக்கொள்ளவும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.

scroll to top