கொரோனா பரவல் எதிரொலி: மதுரை விமான நிலையத்தில் 5 விமானம் ரத்து

மதுரை விமான நிலையத்தில் இருந்து, சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட 11 உள்நாட்டு விமான சேவைகளும்., துபாய், சார்ஜா, சிங்க பூர், இலங்கை உள்ளிட்ட 4 வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது, கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால், உள்நாட்டு விமான சேவையில் குறைந்த அளவு பயணிகள் வருகையாலும். மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அறிவுறுத்தலின் பேரிலும், விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட 5 விமான சேவைகளில் குறைந்த அளவிலான பயணிகளே முன்பதிவு செய்திருந்ததால், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்பட்டது.

scroll to top