கொரோனா நான்காம் அலையைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை:முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Pi7compressedsp1.jpg

தற்போது பரவிவரும் கொரோனா தொற்று நான் காம் அலையை தமிழக அரசு கட்டுப்படுத்த அரசு எந்திரங்களை, போர்க் கால அடிப்படையில் முடுக்கிவிட்டு, பொது மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரித மாக மேற்கொள்ள வேண் டும் என சட்டமன்ற எதிர்க் கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
கொரோனா நான்காம் அலை பரவலை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக் கைகள் அவசியம் குறித்து, சட்டமன்ற எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை:
கொரோனா பெருந்தொற் றின் நான்காம் அலை பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் தற்போது தமிழகம், கேரளா உள்பட பல மாநிலங்களில் தொற்றின் வேகம் அதிகரித் துள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்திலும், கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா மூன்றாம் அலை முடிவடைந்து ஓரளவு இழப்புகளில் இருந்து மீண்டு, பொருளாதார ரீதியாக மேம்பட்டு வருகிற சூழ்நிலையில் இப்போது கொரோனா நான்காம் அலை பரவி பொது மக்களை பீதிக்குள்ளாக்குகிறது. இந்த பெருந்தொற்றில் இருந்து, தற்காத்துக் கொள்ள பொது மக்கள் அனைவரும், சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை முறையாக கடைபிடித்து, தற்காத்துக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே, கொரோனா அலை 2 இல் அரசு போதுமான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற் கொள்ளாததால், பொது மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெருவதிலும், ஆக்சி ஜன் கிடைப்பதிலும், பொருளாதார ரீதியாக வும், ஏராளமான உயிரிழப்பு களையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பதை நினைவில் கொண்டு, தற்போது பரவிவரும் கொரோனா தொற்று நான்காம் அலையை தமிழக அரசு கட்டுப்படுத்த அரசு எந்திரங்களை, போர்க்கால அடிப்படையில்
முடுக்கிவிட்டு, பொது மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா முதல் அலையின்போது எடப் பாடி கே.பழனிசாமி தலை மையிலான அம்மாவின் அரசு மேற்கொண்ட பெருந்தொற்று நோய்தடுப்பு நடவடிக்கைகளை இந்த அரசு பின்பற்றி, பொது மக்களை கொரோனா நான்காம் அலை பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்.
ஆகவே, கொரோனா நோய்தொற்று பர வலை கட்டுப்படுத்த கிருமி நாசினிகள் தெளித்தல், அரசு மற்றும் தனி யார் பேருந்துகள், பேருந்து நிலையங்கள் கிருமிநாசினிகள் கொண்டு தூய்மை படுத்துதல், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை களில் கொரோனா வார்டு கள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதி மற்றும் தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைத்தல்.
கோவை மாவட்டத்தின் எல்லைகளில் அண்டை மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் மற்றும் விமானநிலையம், ரயில் நிலையங்கள் வரும் பயணிகளிடம் நோய்தொற்று குறித்து பரிசோதனை மேற்கொண்டு பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துதல்.
தொற்று பரவலை கட்டுப் படுத்த பொது இடங்கள், பொது மக்கள் அவசியம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமிநாசினிகளை உப யோகபடுத்துவதைக் கட்டாயமாக்க அறிவுறுத்து தல்வேண்டும். பெருந்தொற்று முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து, போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து, கொரோனா நான்காம் அலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

scroll to top