கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு 8 பயணி ரயில்கள் தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல ரயில்கள் நிறுத்தப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், தொற்று பரவல் குறைந்ததும் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கின. தற்போது கொரோனா 3வது அலை தொடங்கியுள்ள நிலையில், ரயில் சேவைகளில் மீண்டும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்று காரணமாக 4 பயணி ரயில்கள் இன்று முதல் 6 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாகர்கோவில் – கோட்டயம் எக்ஸ்பிரஸ், கொல்லம் -திருவனந்தபுரம், கோட்டயம் – கொல்லம், திருவனந்தபுரம் – நாகர்கோவில் உள்ளிட்ட எட்டு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.