கொட்டும் மழையில் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் தரிசனம்

னமழை பெய்து வரும் நிலையிலும் சபரிமலையில் மழையையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.  பக்தர்களின் பாதுகாப்பு கருதி சபரிமலை, சரங்குத்தி, மரக்கூட்டம் ஆகிய பகுதிகளில் வனத்துறையினருடன் இணைந்து கேரள கமாண்டோ படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.  40,460 பேர் தரிசனத்துக்கு முன்பதிவு செய்துள்ளனர்.  இவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

scroll to top