கொங்குநாடு கல்லூரி மாணவருக்கு மத்திய அரசின் சிறந்த தேனீ வளர்ப்பாளர் விருது

kongu1.jpg

​​இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், வேளாண் அறிவியல் நிலையத்தின் கோவை பிரிவு, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மருதம் தேனி வளர்ப்பு பண்ணை ஆகியவை இணைந்து உலக தேனீ வளர்ப்பு தினத்தை முன்னிட்டு நல்லாம்பாளையத்தில் உள்ள மருதம் தேனீ வளர்ப்பு பண்ணையில் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் நமது வேளாண் அறிவியல் நிலையத்தின் மனையியல் துறை வல்லுனர் கோமதி வரவேற்புரை நிகழ்த்தி தேனி வளர்ப்பில் வேளாண் அறிவியல் நிலையத்தின் பங்கு பற்றியும், தேனி வளர்ப்பின் உற்பத்தியில் முக்கியத்துவம் பற்றியும் விவசாய தேனீக்களின் பங்களிப்பை பற்றியும் விளக்கவுரை அளித்தார். மேலும் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ராஜேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேனீக்களின் வகைப்பாடுகள் அவற்றை பராமரிக்கும் முறைகள் பற்றியும், தேனீக்களுக்கு ஏற்படக்கூடிய நோய் மற்றும் மேலாண்மை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

நமது வேளாண் அறிவியல் நிலையத்தின் முன்னோடி தேனீ வளர்ப்பாளரான மணிகண்ட காளிதாஸ் தேனீ கூட்டங்கள் பராமரிப்பு பற்றி செயல் முறை விளக்கமும் தேனீ வளர்ப்பில் உள்ள இடர்பாடுகளை பற்றியும் பயிற்சி அளித்தார். இந்தநிகழ்ச்சியில் விவசாயிகள், தொழில் முனைவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கொங்குநாடு கல்லூரியில் படிக்கும் சக மாணவர் வி. ஜினோ மத்திய அரசு வழங்கும் சிறந்த தேனீ வளர்ப்பாளர் என்ற தேசிய விருதை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பை அளித்த டாக்டர் எஸ்.ராஜேஷ்குமார், உதவிப் பேராசிரியர். தேனீ வளர்ப்பு டிப்ளமோ, பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர், டாக்டர் பி. பாரதி விலங்கியல் துறை, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோர் அவரை பாராட்டினர்.

scroll to top