பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் பலவிதமான நுரையீரல் நோய்களுக்கு அனைத்து வசதிகளுடன் ஒரே இடத்தில் சிகிச்சைகள் அளித்திடும் நோக்கத்துடன் லங் இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் பிரத்யேக நுரையீரல் சிகிச்சை மையத்தை துவக்கியுள்ளது.
10,000 சதுர அடி பரப்பளவில் நுரையீரல் நோய்கள் & நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் மற்றும் உள்நோக்கு நுரையீரல் மருத்துவ மையம் என இம்மையத்தில் இரு சிறப்பு பிரிவுகள் உள்ளன. டாக்டர் ஆர் எம் பி எல் ராமநாதன், நுரையீரல் சிகிச்சை நிபுணர் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் எஸ். சாந்தகுமார், டாக்டர் ஜே. வேணுகோபால், டாக்டர் தீபக் ஆகியோர் நுரையீரல் மருத்துவக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்
இங்கிலாந்து நாட்டு மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியர் ஜேம்ஸ் டி சாமர்ஸ், சண்டிகரில் நுரையீரல் மருத்துவத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் டாக்டர் எஸ்.கே. ஜிண்டால் ஆகியோர் முதன்மை விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு புதிய நுரையீரல் மையத்தை துவக்கி வைத்தனர் அப்போது கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி உடனிருந்தார்.
எம்பார்க் இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து (புரோன்சிக்டாசிஸ்) என்ற தலைப்பில் இரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று நுரையீரல் மருத்துவத்தில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர்.