கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் ஏராளமானோர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள கடைகள் முன்பு படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மார்க்கெட்டில் ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் சண்முகம் (45). வழக்கம் போல வேலை முடிந்ததும் இவர் அந்த பகுதியில் உள்ள கடை முன்பு இரவு படுத்து தூங்கினார். அப்போது அந்த வழியாக சென்ற மர்ம நபர் யாரோ சண்முகத்தின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வழிப்பறி கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.