சபரி மலை சேவா சமாஜத்தின் தேசிய செயற்குழு கூட்டம் கோவை எட்டிமடையில் உள்ள. அமிர்தா கல்லூரி அரங்கில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்திற்கு சமாஜத்தின் துணைத்தலைவர் எஸ்.ஜெ.ஆர் குமார் தலைமை வகித்தார்.தேசிய பொதுச் செயலாளர் ராஜன், அறங்காவலர் பிரகாஷ் ஜி பை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் , சபரிமலை செல்லும் பக்தர்கள் எரிமேலி யாத்திரைக்கு வெறும் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனை கண்டிப்பதோடு, அதிக பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.பம்பையில் குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். நெய் அபிஷேகத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ,சபரிமலை பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வைப்பதாகவும் ,அதனை விலக்கிக்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..தென்தமிழக நிர்வாக செயலாளர் ஜெயக்குமார்,கோவை மாவட்ட தலைவர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கேரள அரசு சபரிமலை பக்தர்களுக்கு அதிக கெடுபிடி ஐயப்பா சேவா சமாஜம் கண்டனம்
