கேரள அரசு கண்டித்து கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறை பிடிக்கும் ஆர்ப்பாட்டம்

p3.jpeg

​கோவை ​​சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு கண்டித்து ​புதன்கிழமை​​ ​​கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறை பிடிக்கும் ஆர்ப்பாட்ட​ம் அனைத்து கட்சியினர் சார்பாக நடைபெற்றது​.​

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்​. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ​எம்சி​ ராம்நகர்.k. சீனிவாசன்,​ ​மாவட்ட செயலாளர்​ ​அணீஸ்,பகுதி பொறுப்பாளர் தாமஸ்​, மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ் சேதுபதி​, வணிக சங்க பேரவையின் பொறுப்பாளர் மாணிக்கம்​, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சர்புதீன்​, எஸ்டிபிஐ கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம்​, ஆதித் தமிழர் பேரவை பொறுப்பாளர் அகிலன்​ உள்ளிட்ட பல கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 112 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்​.​

scroll to top