கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ கருவிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி  திறந்து வைத்தார்

கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் புதிய 750 படுக்கை வசதியுடன் கேஎம்சிஎச் மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில்  புதிய  அதிநவீன மருத்துவக் கருவிகளான கேத் லேப், எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவற்றை கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி. கேஎம்சிஎச் மருத்துவமனை துணை தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி மற்றும் கேஎம்சிஎச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் என் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

scroll to top