கேஎம்சிஎச் மருத்துவமனையில் அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகம்

1634791827747.jpg

கோவை அவினாசி சாலையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில், தமிழகத்தில் முதன் முறையாக, சீரற்ற வேகமான இதயதுடிப்பை கட்டுபடுத்தும், அதிநவீன கிரையோ அபலேசன் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கேஎம்சிஎச் மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஜெர்மனியில் உள்ள கெய்சன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரோபிசியாலஜி துறையின் தலைவர் டாக்டர் சிபு மேத்யூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிச்சாமி பேசுகையில், “பிறக்கும் போதே இதயத்தில் ஏற்படும் குறைபாடுகள்,  மாரடைப்பு,  இதயம் பாதிக்கபடுதல் மேலும் இதயத்தில் உள்ள வால்வுகளில் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படுகிறது. சீரற்ற இதயத் துடிப்பை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இதய சீரற்ற துடிப்பு  குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளது. உடல் பருமன், புகை மற்றும் போதை பழக்கம், வாழ்க்கைமுறையில் மாற்றம், நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருத்தல், அடிக்கடி இதயம் வேகமாக துடித்தல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி போன்ற உணர்வு, தலைசுற்றல் போன்றவை  சீரற்ற இதய துடிப்பு நோயின் அறிகுறிகள் . இதனால் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த சீரற்ற இதய துடிப்பிற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கேஎம்சிஎச்  மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.

இந்நிலையில், சீரற்ற வேகமான இதய துடிப்பை கட்டுபடுத்தும், வகையிலான கிரையோ அபலேசன் எனும் நவீன சிகிச்சை அளிக்கும் தொழில்நுட்ப கருவியை, தமிழகத்திலேயே முதன்முறையாக கேஎம்சிஎச்   மருத்துவமனையில் நிறுவி உள்ளோம். இந்த புதிய  தொழில்நுட்ப சிகிச்சைமூலம் காலில் சிறிய துளை ஏற்படுத்தி அதன்மூலம் கம்பி போன்ற ஒயரை உள்ளே விட்டு வலியில்லாமல் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நோயாளி பூரண குணமடைந்து தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும். இந்த கருவியை கொண்டு 80 நாடுகளில் ஒரு மில்லியன் சீரற்ற இதய துடிப்பு  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

அப்பொழுது கே.எம்.சி.எச் மருத்துவமனையின் இதய மருத்துவர் டாக்டர் தாமஸ் அலெக்சாண்டர் மற்றும் இதயத்துடிப்பு பிரிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

scroll to top