கூடல் புதூரில் கடையை உடைத்து பிஸ்கட் சிகரெட் பாக்கெட்டுகள் பணம் கொள்ளை

கூடல் புதூரில் கடையை உடைத்து பிஸ்கட் சிகரெட் பாக்கெட்டுகள் பணம் கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கூடல்புதூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷமீம் பர்வீன் 33. இவர் கூடல்புதூர் மெயின் ரோடு பிஎஸ்என்எல் ரவுண்டானா அருகே கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை அடைத்துச் சென்ற நிலையில் அதிகாலை கடைதிறக்க சென்றார்.அபபோது கடை உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகள் சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 390 ஐ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர் இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளைஅடித்துச்சென்ற ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

scroll to top