குழாய் மூலம் கேஸ் இணைப்பு! தமிழக அரசு தகவல்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தைத் தொடர்ந்து, தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில், தமிழகம் உற்பத்தி சூழல் அமைப்பில் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தித் துறையில் சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2.28 கோடி வீடுகளுக்கு ரூ. 35 ஆயிரம் கோடியில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு (கியாஸ்) வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் 2,785 விற்பனை நிலையங்கள் மூலம் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

scroll to top