‘குலு குலு’ படத்துக்காக டப்பிங் பேசும் சந்தானம்

FOhY_76akAI4gz8-e1648137045956.jpg

‘மேயாத மான்’, ‘ஆடை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரத்னகுமார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ படத்துக்கு இயக்குநர் லோகேஷுடன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘குலு குலு’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சேஷு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்காக நடிகர் சந்தானம் பேசும் புகைப்படத்தை இயக்குநர் ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

scroll to top