குற்ற வழக்கில் நீதி மன்றத்தில் ஆஜராக வந்த இருவருக்கு அறிவாள் வெட்டு- ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

COURT1.png

கோவையில் குற்ற வழக்கில் நீதி மன்றத்தில் ஆஜராக வந்த இருவருக்கு அறிவாள் வெட்டு. ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மனோஜ் என்பவர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதி.

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ள நிலையில் வழக்கில் வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். இன்னிலையில் நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரத்தில் இருவரும் தேனீர் அருந்த வந்த நிலையில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் தேனீர் கடை முன்பாக கத்தியால் சரமாறி வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் கழுத்தில் பலத்த வெட்டுக்காயத்துடன் இருந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த கோகுலின் உடலை கைபற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலென்சில் அனுப்பி வைத்ததுடன் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணை ஆனையர் சந்தீஸ் விசாரணை மேற்கொண்ட வருவதோடு இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலை வீசி தேடிவருகின்றனர். இன்னிலையில் நேற்று இரவு கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் நடந்த கொலை சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையில் இந்த அறிவாள் வெட்டு சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா எனவும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

scroll to top