குப்பை அகற்றுதல்,கொசு மருந்து அடித்தல்: 22வது வார்டு கவுன்சிலர் செயலுக்கு மக்கள் வரவேற்பு

94c3c47437b6d93194c3c47437b6d931ac48a1ea829f4115ac48a1ea829f4115IMG-20220924-WA00541.jpg

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல கூட்டங்களில்  திமுக மாமன்ற உறுப்பினர் கோவை பாபு   22 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள் மத்தியில் தெரிவிப்பதும் தனது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதும் மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது. மாநகராட்சி 22 வது வார்டுக்குட்பட்ட கொங்கு பேக்கரி அருகே மலை போல் ரோட்டோரம் குப்பைகள் கொட்டப்பட்டு மிகுந்த சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதியாக காணப்பட்டு வந்தது. அந்த இடத்தை தூய்மையாக மாற்ற வார்டு கவுன்சிலர் கோவை பாபு தூய்மை பணியாளர்களுக்கு யோசனை வழங்கினார். அதன்படி தூய்மை பணியாளர்கள் அந்த இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றி சாணம் தெளித்து கோலமிட்டு குப்பை கொட்ட கூடாது என்று அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதி சுகாதாரமான பகுதியாக மாறி உள்ளது. நான்காவது பஸ் ஸ்டாப் அருகே இதே போன்ற முறையில் செங்காளியப்பன் நகர் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இன்று வரை அந்த பகுதியை தூய்மையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்து மோசமான சாலைகளுக்கு பேட்ச் ஒர்க் பணியை தொடங்கி வைத்துள்ளார். டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய் அதிகம் பரவி வருவதை கருத்தில் கொண்டு மாநாட்சி 22 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கவுன்சிலரின் இந்த தொடர் நடவடிக்கை மக்கள் மத்தியில் இந்த வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்வரும் நாட்களிலும் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

scroll to top