தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 26ந்தேதி குடியரசுதினவிழாவை முன்னிட்டு அன்று வழக்கமாக நடைபெறும் தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு மாற்றாக வேறு ஒரு நாளில் தேநீர் விருந்து நடத்தப்படும் என்று ஆளுநர் மாளிகை தகவல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்த பின்னர் வேறொரு நாளில் தேநீர் விருந்து நடைபெறும். தமிழக மக்கள் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா வழிகாட்டுமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்” குறிப்பிடப்பட்டுள்ளது.