குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு ஊர்திகளை சேர்க்க முடியாது- மத்திய பாதுகாப்பு துறை

ஜனவரி 26-ஆம் நாள் இந்தியக் குடியரசு தினத்தன்று, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்கள். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரின் வீரசாகசங்கள் நடைபெறும். பின்னர் சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். இதன் தொடர்ச்சியாக, மாநிலங்களின் கலை, கலாச்சாரம், மற்றும் தனித் தன்மையை எடுத்துரைக்கும் வண்ணம் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம். தமிழ்நாட்டினுடைய கலை, கலாச்சாரம், பண்பாடு, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆகியவற்றை மத்திய அரசிடம் விளக்கி அனுமதியை பெற்றே ஆக வேண்டும் என அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாட்டின் ஊர்திகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில்,  குடியரசுத் தின விழாவில் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு ஊர்திகளை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

scroll to top