குடிபோதையில் மனைவி மீது தாக்குதல்: ரவுடி கணவர் கைது

கீரைத்துறை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி 19. இவருடைய கணவர் சசிகுமார்.இவர் பிரபல ரவுடி ஆவார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியை தொந்தரவு செய்து இருக்கிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் மனைவியை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பாண்டீஸ்வரி கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து கணவர் சசிக்குமாரை கைது செய்தனர்.

scroll to top