கீழப்பட்டி கிராமத்தில், கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்:

சோழவந்தான் அருகே, செல்லம்பட்டி ஒன்றியம் முதலைகுளம் ஊராட்சி, கீழப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மயானத்துக்கு சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி அறிவழகன் தலைமையில், நடந்தது.தகவலறிந்து, உசிலம்பட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக் குழுவினரிடம் மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை போடுவதற்கான வேலைகள் முறையாக நடந்து வருகிறது.விரைவில், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்.சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கான நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.வட்டாட்சியரின் பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் செய்தனர்.அப்போது, துணை வட்டாட்சியர் தெய்வேந்திரன், வருவாய்ஆய்வாளர் உமா மகேஸ்வரி,
கிராம நிர்வாகஅலுவலர் ஜோதிராஜ், ஊராட்சி மன்றச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்து இருந்தனர்.

scroll to top