கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் 10-ம் ஆண்டு விழா

​கோவை கொடிசியா அருகில் உள்ள கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா ‘ஆரா’ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் எம். அழகிரிசாமி தலைமையுரை ஆற்றினார். பள்ளியின் முதல்வர் எஸ். ஜி. கவிதா ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக பாரதிய வித்யா பவன் கோவை மையத் தலைவர் டாக்டர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பங்கேற்றார். அவர் பேசுகையில், எந்த பள்ளிக்கு சிறந்த பெற்றோர் கிடைக்கிறார்களோ அந்த பள்ளி சிறந்த பள்ளியாகத் திகழும். ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் அளவற்ற அறிவும் ஆற்றலும் புதைந்து கிடக்கிறது. அதை வெளிக்கொணர்வதே கல்வியின் நோக்கமாகும். குழந்தைகளின் கல்வியில் பெற்றோருக்கும் பெரும் பங்கு உள்ளது. கல்வியைக் கற்று பெரிய உயரத்திற்கு சென்றாலும், மாணவர்கள்; நம் தேசம், நம் மொழி, நம் கலாச்சாரம் என்ற உணர்வுடன் என்றும் இருக்க வேண்டும். கொரொனா தொற்றுக்குப் பின்னும் இந்தியா நல்ல பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றார்.

பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் அறங்காவலர் டாக்டர் ஜனனி மற்றும் தொழிலதிபர் எம் பழனிசாமி மற்றும் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

scroll to top