34 வயது சுரங்கா லக்மல், இலங்கை அணிக்காக 2009 முதல் விளையாடி 68 டெஸ்டுகள், 86 ஒருநாள், 11 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். தற்போது இலங்கை டெஸ்ட் அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இலங்கை அணியின் கேப்டனாகவும் 5 டெஸ்டுகளில் விளையாடி அதில் 3-ல் வெற்றி பெற்றுள்ளார். இலங்கை அணி இந்தியாவில் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்குப் பிறகு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல், இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 168 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் 5 விக்கெட்டுகளை லக்மல் எடுத்துள்ளார். 2018 முதல் 72 விக்கெட்டுகளை எடுத்து இலங்கை அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தார்.