கிராமங்களில் வேளாண் தொழில் நுட்ப பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி வட்டாரத்திலுள்ள களத்தூர் மற்றும் பள்ளப்பட்டி ஆகிய கிராமங்களில் நெல் மற்றும் காய்கறி பயிரில் தாக்கப்பட்ட நோயின் பாதிப்பினை நரிக்குடி வட்டார வேளாண்மைத்துறை சார்பாக அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் இன்று (20-12-2021) நரிக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராஜ் மற்றும் வேளாண்மை அலுவலர் ஜெயச்சந்திரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், இன்று நடைபெற்ற விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராம்குமார் மற்றும் அருப்புக்கோட்டை வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலைய நோய்யியல்துறை அலுவலர் அகிலா ஆகியோர் நெல் தண்டுதுளைப்பான் மற்றும் அம்பை 16 ரக நெல் வகைகளில் ஏற்பட்ட பாதிப்பினை தடுக்கும் முறைகளை விளக்கமாக எடுத்துக்கூறினர்.
மேலும் ,இந்த நிகழ்ச்சியின் போது, உதவி வேளாண்மை அலுவலர்களான சின்னமணி மற்றும் சிவக்குமார் உடனிருந்தனர்.
இந்த கலந்துரையாடல் பயிற்சிக்கான ஏற்பாடுகளை நரிக்குடி வட்டார உதவி தொழில் நுட்ப வல்லுனர்களான அருண்குமார் மற்றும் காளீஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

scroll to top